ஞாயிறு, 20 அக்டோபர், 2013

THE ANCIENT JAFFNAJAFFNA HINDU COLLEGE IN DIFFERENT DESIGN


JAFFNA HINDU COLLEGE
OUR TRADITIONAL FOODS


சனி, 5 அக்டோபர், 2013

சர்வதேச ஆசிரியர் தினம் இன்று........

சர்வதேச ஆசிரியர் தினம் இன்று........


மாதா, பிதா, குரு, தெய்வம் என்றார்கள், வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதற்கு இந்த பழமொழியே சாட்சியாக உள்ளது.


வெறும் மாணவர்களாக பள்ளிக்கு வரும் சிறுவர்களுக்கு ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம், படிப்பு என அறிவுக் கண்ணை திறந்து வைத்து அவர்களை சாதனையாளர்களாக்குவது ஆசிரியர்களே. அவர்களைக் கொண்டாடும் நாள் இன்னாள்.
இன்று பல பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கியும், மலர் கொடுத்தும் மாணவ, மாணவிகள் தங்களது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.


எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு" என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர்; மகிழ்ச்சி தோன்றும். இதனை சொல்வதை விட உணர்வுப் பூர்வமாக உணர முடியும். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள். ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர்.அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர்.


ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்றவர்களும் அவர்களே. நமக்காக தம்மை அர்ப்பணித்த இவர்கள் எமது மனதளவு நன்றிக்கும், செயலளவு மரியாதைக்கும் உருத்துடையவர்களே.


‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்பதனை திருக்குறளின் முதல் கவிதையாக அமைத்துள்ளார் வள்ளுவர்.‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ என ஆத்திசூடியில் பாடுகின்றாள் ஔவை.
இவ்வாறாக மனித வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத, மனித சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குகின்ற ‘ஆசிரியரை’ கௌரவப்படுத்தும் நோக்கில் பல்வேறு சமய கலாசார மற்றும் நிறுவன நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன. இவை மனித நாகரிகத்தின் வளர்ச்சிப்படிகள் எனின் மிகையல்ல.


வியாழன், 3 அக்டோபர், 2013

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சிறுவர் செயற்பாட்டுக் கழகம்

 14 ஆண்டுகள் நிறைவில் தடைகள் பல தாண்டி சோதனைகளை சாதனைகளாக்கி யாழ் இந்துவின் மடியில் என்றும் 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சிறுவர் செயற்பாட்டுக் கழகம்
facebook-https://www.facebook.com/childrenactionclubofjhc

twitter- http://twitter.com/jhcchildrenclub


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சிறுவர் செயற்பாட்டுக் கழகம்


சிறுவர் செயற்பாட்டுக் கழகம் யாழ் இந்துக்கல்லூரியில் இயங்கிவரும் கழகங்களில் ஒன்றாகும். இது இக்கல்லூரியின் மாணவர்களின் நன்மை கருதி பல செயற்பாடுகளை செய்து வருகிறது.

வரலாறு
இக் கழகம் 2000ம் ஆண்டு ஒக்டோபர் 1ம் திகதி அன்று சிறுவர் உள மேம்பாடு கருதி அதிபர் ஏ. சிறிகுமரன் (1996 - 2005) காலத்தில் அல்பிரட் ஜெனீவா என்பவரால் உருவாக்கப்பட்டது. பொறுப்பாசிரியராக திருமதி. சா . அருந்தவபாலன் இருந்தார். இக்கழகத்தின் செயற்பாடாக வலயமட்ட பொதுஅறிவுப் பரீட்சை இவரது காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. நா. கு . மகிழ்ச்சிகரன் 2012 இலிருந்து பொறுப்பாசிரியராக உள்ளார். 2009 ஆம் ஆண்டு இக்கழகத்தின் 10வது ஆண்டு இதழ் “கனிவு“ வெளியிடப்பட்டது. 2011ல் “சங்கமம்“ இறுவட்டு பாடல்கள் வெளியிடப்பட்டது. 2012ல் ”கண்ணீர் பூக்கள்” எனும் கவிதை இக் கழக அநுசரணையில் வெளியானது. 2013ம் ஆண்டில் இக்கழகத்தின் முகப்புத்தகம் (facebook) மற்றும் ருவிற்றர் (twitter) கணக்குகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

சிறப்பு
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சிறந்த கழகமாக 2009ம் ஆண்டு இக் கழகம் தெரிவு செய்யப்பட்டது. 2013ல் பாடசாலை குமாரசுவாமி பூங்கா, சிரமதான நடவடிக்கை மூலம் துப்பரவு செய்யப்பட்டது. 2013ல் கழக அங்கத்தவர்களுக்கு தனிப்பட்ட சீருடை உருவாக்கப்பட்டுள்ளது. 2013ல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நூலகத்துக்கு புத்தகங்கள் சேகரித்து வழங்கப்பட்டது. இதைவிட வருடாந்தம் இப் பாடசாலை தவிர 5 பாடசாலைகளில் பொதுஅறிவுப் பரீட்சை மற்றும் கவிதை, கட்டுரை, பேச்சு, குறுநாடகம், சித்திரம் போன்ற போட்டிகளும் நடாத்தி பரிசு வழங்கி வருவதும் குறிப்பிடத் தக்கது. இவை வருடாந்த சிறுவர் தின நிகழ்வின் போது வழங்கப்படுகின்றன.